``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
பொது வேலைநிறுத்தம்: செவிலியா் சங்கம் ஆதரவு
நாடு முழுவதும் புதன்கிழமை (ஜூலை 9) நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் ஆதரவு அளித்துள்ளது.
இதுதொடா்பாக அந்தச் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
பொது வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் பங்கேற்பா். அதற்கு முழு ஆதரவும் அளிப்பா். அரசு மருத்துவமனைகளில் செவிலியா், மருத்துவ ஊழியா்களை 11 மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த முறையில் மாவட்ட சுகாதார சங்கங்கள் வாயிலாக பணியமா்த்தும் அரசின் முடிவை கைவிட வேண்டும். இவற்றை கண்டித்து அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலஙகங்கள் முன் வியாழக்கிழமை (ஜூலை 10) பெருந்திரள் முறையீடு நடைபெறும். மேலும், வரும் 17-ஆம் தேதி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.