கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
வாக்காளர் பட்டியல் திருத்தம் பிகார் அரசியலமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா
பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்தின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
1.50 கோடிக்கும் மேற்பட்ட பிஹாரிகள் தங்கள் மாநிலத்தை விட்டு வெளி மாநிலத்தில் வேலை செய்கிறார்கள். அவர்கள் எவ்வாறு தங்களது குடும்ப விவரங்களைப் பதிவு செய்வார்கள்? எப்படி வாக்களிப்பார்கள்? இறந்த பெற்றோருக்கான சான்றிதழ்களை எங்கே பெறுவார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குல்காமில் ஒரு கட்சி நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது செய்தியாளர்களிடம் பேசினார்.
அம்பேத்கரால் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை இருந்தது. அதன்பின்னர், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காகத் திருத்தப்பட்டது.
இன்று, தேர்தல் ஆணையம் அரசியலமைப்பிற்கு எதிரான ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. யாரை மகிழ்விக்க இந்த முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
இந்த சூழ்ச்சிகளை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மக்கள் விழித்தெழ வேண்டிய நேரம் வந்துவிட்டது. தொடர்ந்து சூழ்ச்சிகளில் ஈடுபட்டால் அரசியலமைப்பைக் காப்பற்ற போராட்டம் நடைபெறும். அது முந்தைய போராட்டத்தை விட பெரியளவில் இருக்கும்
ஜூன் 24 அன்று தேர்தல் ஆணையம் பிகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தல்களை வெளியிட்டது, இதில் தகுதியற்ற பெயர்களை நீக்கி, தகுதியான குடிமக்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதாகத் தெரிகிறது.
பிகாரில் கடைசியாக 2023ல் திருத்தம் செய்யப்பட்டது. மாநிலத்தில் பேரவைத் தேர்தல் இந்தாண்டின் நவம்பர்- டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளன.