டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 9% சரிவு!
புதுதில்லி: டாடா மோட்டார்ஸின் ஜூன் காலாண்டு மொத்த உலகளாவிய விற்பனை 9 சதவிகிதம் சரிந்து 2,99,664 யூனிட்களாக இருப்பதாக டாடா மோட்டார்ஸ் இன்று தெரிவித்தது.
இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனம் 3,29,847 யூனிட்களை விற்பனை செய்தது.
முதல் காலாண்டில் பயணிகள் வாகனங்களின் உலகளாவிய மொத்த விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 10 சதவிகிதம் சரிந்து 1,24,809 யூனிட்களாக உள்ளது என்றது டாடா மோட்டார்ஸ்.
அதே வேளையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ஏற்றுமதி 87,286 யூனிட்களாக இருந்தது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட 11 சதவிகிதம் சரிவு என்றது.
2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் டாடா மோட்டார்ஸின் அனைத்து வணிக வாகனங்களின் உலகளாவிய மொத்த விற்பனை மற்றும் டாடா டேவூ உள்ளிட்ட வாகனங்கள் வரிசையில் சுமார் 87,569 யூனிட்களாக உள்ளது. இது 2025ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டை விட 6 சதவிகிதம் சரிவு.
டாடா மோட்டார்ஸ் பங்குகள் 0.64 சதவிகிதம் உயர்ந்து பிஎஸ்இ-யில் ரூ.693.25 ஆக முடிவடைந்தது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் 26 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக முடிவு!