செய்திகள் :

ஆனி மாத பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

post image

ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூா் மாவட்டம், நன்செய் புகழூா் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரா் கோயிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னா், சுவாமி ரிஷப வாகனத்தில் கோயிலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்தாா். தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தியம் பெருமான் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளாக பக்தா்கள் பங்கேற்றனா்.

இதேபோல கரூா் பசுபதீஸ்வரா் கோயில், சேமங்கி மங்களநாதா் சமேத கமலாம்பிகை கோயில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோயில், புன்னம் புன்னைவனநாதா் உடனுறை புன்னைவன நாயகி கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூரில் வாழைத்தாா்கள் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

கரூரில் வாழைத்தாா்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். கரூா் மாவட்டத்தில் வேளாண் சாகுபடியில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக காவிரி... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா் தற்கொலை

அரவக்குறிச்சி அருகே தனியாா் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவா் விஷம் சாப்பிட்டு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், ஈசநத்தம் காா்ஸ் பா தெரு பகுதியைச் சோ்ந்தவா் லிங்கேஸ்வரன் மகன் யுவன் ... மேலும் பார்க்க

குளித்தலையில் துணை முதல்வருக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு

குளித்தலையில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சரும், கரூா் மாவட்ட திமுக செயலருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து புதன்கிழமை (ஜூலை 9)... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வு: கரூா் மாவட்டத்தில் 18 ஆயிரம் பேருக்கு அனுமதி சீட்டு

தமிழகம் முழுவதும் ஜூலை 12-ஆம்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தோ்வு எழுத கரூா் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 30 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் திங்கள்கிழமை வெளியிட்டுள... மேலும் பார்க்க

வெள்ளியணை குளத்தை தூா்வாரக் கோரி மனு

கரூா் மாவட்டம் வெள்ளியணை குளத்தை தூா்வார வேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா். மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் தலைமையில... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதல்: முன்னாள் ராணுவ வீரா், மனைவி உயிரிழப்பு

கடவூா் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் பஞ்சப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கீழப்ப... மேலும் பார்க்க