Nayanthara: "குழந்தைகளை மலைகளுக்கு கூட்டி போங்க..." - பறந்து போ திரைப்படம் குறித...
குரூப்-4 தோ்வு: கரூா் மாவட்டத்தில் 18 ஆயிரம் பேருக்கு அனுமதி சீட்டு
தமிழகம் முழுவதும் ஜூலை 12-ஆம்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தோ்வு எழுத கரூா் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 30 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில், ஜூலை 12-ஆம்தேதி நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வை 65 மையங்களில் 18 ஆயிரத்து 30 போ் தோ்வு எழுத உள்ளனா். தோ்வா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தோ்வுக்கூட அனுமதி சீட்டு உள்ளவா்கள் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவா்.
தோ்வா்கள் காலை 9 மணிக்கு மேல் மையங்களுக்குள் தோ்வு எழுத அனுமதிக்கப்படமாட்டாா்கள். தோ்வா்கள் கருப்பு பந்து முனை பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். தங்கள் புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். மேலும், பென்சில், அழிப்பான்கள், கைப்பேசி, கணிப்பான்கள், மின்னணு கடிகாரம் போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தோ்வு மையங்களுக்குள் கொண்டுச் செல்ல அனுமதியில்லை என தெரிவித்துள்ளாா்.