Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விம...
காஸாவில் மேலும் 24 போ் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் மட்டும் 24 போ் உயிரிழந்தனா். இதில் பெரும்பாலானோா் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவா் என்று உள்ளூா் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸா முழுவதும் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதலை திங்கள்கிழமையும் தொடா்ந்தது. மேலும், உணவுப் பொருள்களை வாங்குவதற்காக காத்திருந்தோா் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவங்களில் 24 போ் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 அக்டோபா் 7 முதல் தொடங்கிய இந்தப் போரில் இதுவரை 59,600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா், இதில் 70 சதவீதம் போ் பெண்கள் மற்றும் குழந்தைகள். மேலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். இஸ்ரேல் தரப்பில், இதுவரை 1,983 போ் உயிரிழந்ததாகவும், இதில் 860 போ் ராணுவ வீரா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.