கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க முடிவு! அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
ரஷியாவுக்கு எதிரான போரில், உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கவுள்ளதாக, அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் வெள்ள மாளிகையில், ஜூலை 7 (அமெரிக்க நேரப்படி) நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல்கள் குறித்து அதிபர் டிரம்ப் பேசினார்.
ரஷியாவால் அதிக பாதிப்புகளை உக்ரைன் சந்தித்துள்ளதாகக் கூறிய அவர், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மீது தான் மகிழ்ச்சியாக இல்லை எனவும், உக்ரைனின் தற்காப்புக்கு கூடுதல் ஆயுதங்களை அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்குவது, கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிபர் டிரம்ப்பால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ரஷியாவின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் உக்ரைன் பலத்த சேதாரங்களைச் சந்தித்து வந்தது.
மேலும், இந்தத் தாக்குதல்களில் ரஷியா ஈரானின் ஷாஹெத் டிரோன்களை பயன்படுத்தியதாக உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் போரில், உக்ரைனின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தை ரஷிய ராணுவம் கைப்பற்றியதாக அறிவித்துள்ளது.
ரஷியாவின் அறிவிப்பு வெளியான அதே சமயத்தில், அதிபர் டிரம்ப்பின் இந்த புதிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
President Donald Trump has announced that the United States will provide additional weapons to Ukraine in its war against Russia.
இதையும் படிக்க: காஸாவில் 5 இஸ்ரேலிய வீரர்கள் பலி!