கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற தென்னாப்பிரிக்கா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்றுடன் (ஜூலை 8) நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 626 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது.
ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது. முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே தரப்பில் சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 83 ரன்கள் எடுத்தார்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் பிரிநெலான் சுப்ராயன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கோடி யூசுஃப் மற்றும் வியான் முல்டர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கார்பின் போஸ்ச் மற்றும் செனுரான் முத்துசாமி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று (ஜூலை 8), ஜிம்பாப்வே அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணியில் நிக் வெல்ச் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் கிரைக் எர்வின் 49 ரன்களும், கைட்டானோ 40 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஸ்ச் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். செனுரான் முத்துசாமி 3 விக்கெட்டுகளையும், கோடி யூசுஃப் 2 விக்கெட்டுகளையும், வியான் முல்டர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என முழுமையாக வென்றது.
South Africa won the second Test against Zimbabwe by an innings and 236 runs.
இதையும் படிக்க: 3-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன் சேர்ப்பு!