செய்திகள் :

இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் கொலை! ஈரான் அரசு அறிவிப்பு!

post image

இஸ்ரேலுடனான போரில் சுமார் 1,060 பேர் கொல்லப்பட்டதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் ஈரான் அரசு அறிவித்துள்ளது.

ஈரானின் ராணுவ தளவாடங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் மீது “ஆபரேஷன் ரைசிங் லயன்” எனும் பெயரில் இஸ்ரேல் கடந்த ஜூன் 13 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, ஈரான் - இஸ்ரேல் இடையில் போர் தொடங்கிய நிலையில், இருநாடுகளும் ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவற்றின் மூலம் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தன.

இந்தப் போரானது 12 ஆம் நாளை எட்டியதுடன், கடந்த ஜூன் 24 ஆம் தேதி போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதை, இருநாடுகளும் ஏற்றுக்கொண்டன.

தற்போது போர் நிறுத்தம் அமலிலுள்ளதால், போரில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஈரான் அரசு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், ஈரானின் தியாகிகள் மற்றும் படைவீரர்கள் அறக்கட்டளையின் தலைவர் சயீத் ஒஹாதி, அந்நாட்டின் அரசு தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போரில் சுமார் 1,060 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்திருப்பதால், பலி எண்ணிக்கை 1,100 ஆக அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தப் போரில் ஈரானில் சுமார் 435 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 1,090 பேர் கொல்லப்பட்டதாகவும், 4,475 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் வாஷிங்டனைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அமைப்பு கூறுவது குறிப்பிடத்தக்கது.

The Iranian government has announced that about 1,060 people have been killed in the war with Israel, and that the death toll may rise further.

இதையும் படிக்க: உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க முடிவு! அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

ஆக. 1முதல் கூடுதல் வரி விதிப்பு அமலாவது உறுதி; காலக்கெடு நீட்டிக்கப்படாது! -டிரம்ப்

வெளிநாட்டு பொருல்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் அமலாவது உறுதி; காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை(ஜூலை 8... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்புக்கு விரைவில் நோபல் பரிசு? -இஸ்ரேல் பிரதமர் சூசகம்

டொனால்ட் டிரம்ப்பின் பெயர் நோபல் பரிசுக்கு மீண்டும் ஒருமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துர... மேலும் பார்க்க

மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை தொடங்கிவிட்டார். முதல்கட்டமாக, இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, வங்கதேசம், மியான்மர், இந்தோனேஷியா உள்பட 14 நா... மேலும் பார்க்க

விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட 160 பேர் அஸ்தி! கடலில் கலந்த பரிதாபம்!

விண்வெளிக்கு அஸ்தியைக் கொண்டுசென்று வரும் திட்டம் வெற்றியடையாமல், விண்கலம் பசிபிக் கடலில் கலந்ததால், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.டெக்ஸாஸில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் தனியார் இறுதிச் சடங்கு நி... மேலும் பார்க்க

குழந்தை பெற்றுக் கொள்ளும் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி! ரஷியாவில்

ரஷியாவில், குறைந்து வரும் குழந்தை பிறப்பைக் கருத்தில் கொண்டு, பல மாகாணங்களில், கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி, 900 ஈரோக்கள், கருவுறும் பள்ள... மேலும் பார்க்க

கென்யா அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! 11 பேர் பலி!

கென்யா நாட்டில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில், அந்நாட்டு காவல் துறையினர் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தலைநகர் நைரோபியில், ஆளும் அரசின் முறைகேடுகளை எதிர்த்தும்,... மேலும் பார்க்க