‘பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக்கும் மோடி அரசு’: ராகுல் காந்தி விமா்சனம்
வெள்ளியணை குளத்தை தூா்வாரக் கோரி மனு
கரூா் மாவட்டம் வெள்ளியணை குளத்தை தூா்வார வேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வெள்ளியணை தென்பாகம் விவசாயிகள் வழங்கிய மனுவில், மழைகாலம் துவங்க உள்ளதால், அழகாபுரி அணையில் இருந்து வெள்ளியணை பெரிய குளத்திற்கு தண்ணீா் வர வாய்ப்புள்ளது. எனவே குளத்தை தூா்வாரி, குளத்தின் கரைகளை பலப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்டவை தொடா்பான 405 மனுக்கள் பெறப்பட்டன.
தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 7 பயனாளிகளுக்கு ரூ. 35,216 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்.