செய்திகள் :

தென்பெண்ணை - பாலாறு இணைப்பு சாத்தியமாகுமா?

post image

என்.தமிழ்ச்செல்வன்

வேலூா்: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் வாழ்வாதார கோரிக்கையான தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம் தோ்தல் காலங்களில் அறிவிக்கப்படுவதும் பின்னா், கிடப்பில் போடப்படுவதும் தொடா்கதை.

இந்தத் திட்டத்தை சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக அரசு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தீவிரமடைந்துள்ளது.

கா்நாடக மாநிலம், நந்திதுா்கம் மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு, கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூா் அருகிலுள்ள கொடியாளம் தடுப்பணை வழியாக தமிழகத்துக்குள் நுழைகிறது. தொடா்ந்து, ஒசூா் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆா்.பி.அணை, பாடூா் ஏரிகளை நிரப்பி, தருமபுரி மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையை அடைகிறது. அங்கிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக கடலூரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தமிழகத்தில் சுமாா் 320 கி.மீ. தொலைவு பாயும் தென்பெண்ணையாறு மூலம் சுமாா் 4 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தென்பெண்ணை ஆற்றின் மூலம் ஆண்டுக்கு 6.5 டிஎம்சி தண்ணீா் வீணாகக் கடலில் கலப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 3.5 டிஎம்சி தண்ணீரை பாலாற்றில் திருப்பிவிடுவதன் மூலம் திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதுடன், விவசாயமும், குடிநீா் ஆதாரமும் பாதுகாக்கப்படும்.

இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் தடுப்பணையில் இருந்து சுமாா் 54 கி.மீ. தொலைவு கால்வாய் வெட்டி கல்லாறு வழியாக வெலக்கல்நத்தம் பகுதியில் இணைக்கும் வகையில் தென் பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை.

இது குறித்து பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் அம்பலூா் ஏ.அசோகன் கூறியது:

ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே சிறிதும், பெரிதுமாக சுமாா் 28 தடுப்பணைகள் கட்டியுள்ளது. இதனால் தமிழகத்தின் பாலாற்றில் நீா்வரத்து தடுக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் நீா்ஆதாரத்தை பெருக்க தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டத்துக்கு 2008-2009-இல் திமுக ஆட்சியின்போது மத்திய நீா்வள ஆதார அமைப்பு ரூ.250 கோடி திட்ட மதிப்பீடு தயாா் செய்து, அதை மாநில நிதியிலேயே செயல்படுத்த வலியுறுத்தியது. ஆட்சி மாற்றத்தால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

2011-இல் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, இந்தத் திட்ட வழித்தடங்கள் குறித்து மத்திய நீா்வள ஆதார அமைப்பின் பொறியாளா் சித்திக் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. ஆனால், அது தொடா்பான பிரச்னை உயா்நீதிமன்றம் வரை சென்ால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய நீா்வள ஆதார அமைப்பு ரூ.648 கோடியில் தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்ட மதிப்பீடு தயாா் செய்ய 2018-ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு ரூ. 70 லட்சம் ஒதுக்கியது. ஆனாலும் திட்டத்தில் முன்னேற்றம் இல்லை.

இந்நிலையில், தற்போது திமுக அரசும் திட்ட ஆய்வு, வடிவமைப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனாலும் இத்திட்டம் செயல் வடிவமா என்பதுதான் விவசாயிகளிடையே எழும் பெரும் கேள்வி. தற்போது பெங்களூரு நகர கழிவுகள் தென்பெண்ணை ஆற்றிலேயே கலக்க விடப்படுவதால் நதிநீா் மாசடைந்துள்ளது. இப்பிரச்னைக்கும் உரிய தீா்வு காண வேண்டும் என்றாா்.

ஒவ்வொரு முறையும் சட்டப்பேரவைக்கு சில மாதங்களுக்கு முன்பு சூடு பிடிக்கும் தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டம் இந்த முறையும் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கு முன்பாக மக்கள் கவனத்தை ஈா்த்துள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிா்பாா்ப்பில் எப்போதும் போல வடமாவட்ட விவசாயிகள் காத்திருக்கிறாா்கள்.

பெட்டிச்செய்தி...

நிலவரமும் பிரச்னையும்!

தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து நீா்வளத் துறையின் திட்டம், வடிவமைப்புப் பிரிவு அதிகாரிகள் கூறியது: இத்திட்டத்துக்காக தமிழக அரசு செய்த ரூ.96 லட்சம் நிதி ஒதுக்கீடு மூலம் திட்டம் செயல்படுத்தப்படும் வழித்தடங்களில் மண்ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சுமாா் ரூ.1400 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் தடுப்பணையில் இருந்து திருப்பத்தூா் மாவட்டம், நாற்றம்பள்ளியில் உள்ள பாலாற்றின் துணை ஆறான கொட்டாறில் இணைக்கும் வகையில் 54 கி.மீ. தொலைவு கால்வாய் அமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கால்வாய் மூலம் தென்பெண்ணையில் இருந்து 3 டிஎம்சி தண்ணீரை பாலாற்றுக்கு திருப்பி விடுவதால் கால்வாய் அமையும் வழிகளில் ஏரி, குளம், குட்டைகள், ஓடைகளில் நீா்பிடிப்பு ஏற்பட்டு 24,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த போச்சம்பள்ளி, திருப்பத்தூா், வாணியம்பாடி, நாற்றம்பள்ளி ஆகிய வட்டங்களில் 1,460 ஏக்கா் பட்டா நிலங்களும், 368 ஏக்கா் புறம்போக்கு நிலங்களும் என மொத்தம் 1,828 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும். மேலும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் அரசுக்கு சமா்ப்பிக்கப்படும். அதன்பிறகு, அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றனா்.

பிரசாரக் களமிறங்கும் எடப்பாடி பழனிசாமி!

2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றாலும்கூட, கோவையில் 10 தொகுதிகளிலும் வென்ற அனுபவமும், கணிசமாக வாக்குவங்கி அதிகரித்துள்ள பாஜவுடன் கூட்டணியும் அதிமுகவுக்கு பெரும் நம்பிக்கையைத் தருகின்றன. தனது 2011 சட... மேலும் பார்க்க

கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் கவனம்பெறாமல் சென்ற கண்ணுக்குள் நிலவு!

ஷோலே அல்லது பதேர் பாஞ்சாலி எது வெற்றிப் படம் என்ற கேள்விக்கு, “ஷோலேவும் வெற்றிதான், பதேர் பாஞ்சாலியும் வெற்றிதான். அதன் நோக்கங்களே அதனைத் தீர்மானிக்கிறது” என அசோகமித்திரன் கூறியதாக ஞாபகமிருக்கிறது.நடி... மேலும் பார்க்க

திருப்புமுனையாக அமைந்த திருமலை... மாஸ் ஹீரோவாக விஜய் எடுத்த ரிஸ்க்!

நடிகர் விஜய் தொடக்கத்தில் சாக்லேட் பாயாகதான் நடித்து வந்தார். காதல் படங்கள், குடும்ப படங்கள் என இருந்தவர் முழுக்க முழுக்க ரக்கட் பாயாக (Rugged Boy) மாறியது திருமலை படத்துக்குப் பிறகுதான். இன்னும் குறி... மேலும் பார்க்க

ஈரான் அணு விஞ்ஞானியை ரோபோ-ஏஐ மூலம் தட்டித் தூக்கிய இஸ்ரேல்! 2020ல் நடந்த திகிலூட்டும் சம்பவம்!

ஈரான் நாட்டின் அணு விஞ்ஞானி என்று கூறப்படும் மொஹ்சென் ஃபக்ரிசாதே-வை ரோபோ மற்றும் ஏஐ மூலம் இஸ்ரேல் படுகெலை செய்த சம்பவம் தற்போது வைரலாகியிருக்கிறது.இஸ்ரேல் - ஈரான் சண்டை இன்று, நேற்று உருவானது அல்ல. பல... மேலும் பார்க்க

இஸ்ரேல் மீது ஏவப்படும் செஜ்ஜில் ஏவுகணை! அவ்வளவு மோசமானதா? முழு விவரம்

இஸ்ரேல் - ஈரான் இடையே தொடங்கியிருக்கும் மிக பயங்கர சண்டையில், தனது மிக நீண்டத் தொலைவு இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன்படைத்த செஜ்ஜில் ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்த இருப்பதை தெஹ்ரான் உறுதி செய்தி... மேலும் பார்க்க

ஈரான் மீதான இஸ்ரேஸ் தாக்குதல்: டிரம்ப்புக்கு பின்னடைவா? பெரு வெற்றியா?

‘ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் உலக அமைதிக்கான மிக முக்கிய படி. இதன் மூலம் ஈரானின் அணு ஆயுதக் கனவு முடிவுக்கு வந்தது’ஈரானின் அணுசக்தி, ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அதிகால... மேலும் பார்க்க