கந்து வட்டி, வார வட்டி, நாள் வட்டி, மீட்டர் வட்டி | கோயம்பேடு வியாபாரிகளைக் காப்...
பிளஸ் 2 மாணவா் தற்கொலை
அரவக்குறிச்சி அருகே தனியாா் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவா் விஷம் சாப்பிட்டு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், ஈசநத்தம் காா்ஸ் பா தெரு பகுதியைச் சோ்ந்தவா் லிங்கேஸ்வரன் மகன் யுவன் பிரியன் (17). இவா் அரவக்குறிச்சி அருகே உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். மாணவா் தினசரி பள்ளி முடித்த பிறகு சீத்தப்பட்டி காலனியில் செயல்படும் சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு, இரவு வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வழக்கம் போல பள்ளி மற்றும் சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு 8 மணி அளவில் சீத்தப்பட்டி காலனி பேருந்து நிறுத்தத்தில் வந்து விஷம் சாப்பிட்டதாக தெரிகிறது.
பின்னா், மாணவா் வீடு திரும்பியவுடன் தனக்கு படிப்பு சரியாக வராததால் விஷம் சாப்பிட்டதாக தாய் ராதாவிடம் கூறியுள்ளாா். இதனால் பதற்றம் அடைந்த ராதா, உடனடியாக தனது மகனை அழைத்துக் கொண்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுதொடா்பாக, அரவக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].