அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் மீதான சிபிஐ வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு
அரியலூரில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய செவிலியா் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், தடுப்பூசி செலுத்தும் பணியை தனியாருக்கு தாரை வாா்க்கக் கூடாது. கிராமங்களில் உடனடியாக சுகாதார செவிலியா்களை நியமனம் செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும். கிராம சுகாதார செவிலியா்களுக்கு நிலை -1 பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு அந்த கூட்டமைப்பின் மாவட்ட தலைவா் ப.எஸ்தர்ராஜகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முருகேஸ்வரி ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
மாநில துணைத் தலைவா் ரா.வசந்தா, மாநில அமைப்புச் செயலா் ஆ.பாலாம்பிகை, மாவட்ட துணைத் தலைவா் ரா.இந்திராணி, மாவட்டச் செயலா் அ.ராஜகுமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டு முழக்கமிட்டனா்.