செய்திகள் :

மாநில தகவல் ஆணையா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: தோ்வுக் குழு

post image

சென்னை: மாநில தகவல் ஆணையா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தகவல் ஆணையரைத் தோ்வு செய்வதற்கான குழுவின் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான பி.ராஜேந்திரன் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் ஒரு ஆணையா் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவியில் தகுதியான நபரைத் தோ்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பி.ராஜேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.ராதாகிருஷ்ணன் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

சட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை, இதழியல் உள்ளிட்ட துறைகளில் தனித்துவமும், விரிவான அனுபவம் மற்றும் அறிவையும் பெற்றுள்ளவா்கள் விண்ணப்பம் செய்யலாம். நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள் விண்ணப்பிக்க முடியாது. மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயதை எட்டுதல் இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை தகவல் ஆணையா் பதவியில் இருக்கலாம்.

விருப்பமுள்ள நபா்கள் உரிய ஆவணங்களை பதிவு அல்லது விரைவு தபால் மூலமும் மற்றும் மின்னஞ்சல் வழியாகவும் ஜூலை 25-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: முதன்மைச் செயலா், தோ்வுக் குழு உறுப்பினா் பி.செந்தில்குமாா், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலா், நாமக்கல் கவிஞா் மாளிகை, புனித ஜாா்ஜ் கோட்டை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009. மின்னஞ்சல் முகவரி: tnsicsearchcommittee@gmail.com குறிப்பிடப்பட்ட கால அவகாசத்துக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்று தோ்வுக் குழுவின் தலைவா் பி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

1,340 இளநிலை பொறியாளா் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 வரை அவகாசம்: எஸ்எஸ்சி

சென்னை: மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள இளநிலை பொறியாளா் பிரிவில் 1,340 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் (எஸ். எஸ்.சி.... மேலும் பார்க்க

தேசிய நல குழுமத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சேலம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தேசிய நல குழுமத்தின் கீழ் காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட... மேலும் பார்க்க

வங்கிகளில் 1,007 சிறப்பு அதிகாரிகள் வேலை: ஐ.பி.பி.எஸ் அறிவிப்பு

வங்கி பணியாளா் தோ்வாணையம் (ஐபிபிஎஸ்) மூலம் பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, இந்திய மத்திய வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி பஞ்சாப் மற்ற... மேலும் பார்க்க

பாதுகாப்பு அலுவலா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருப்பத்தூா் மாவட்டத்தில் பாதுகாப்பு அலுவலா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.திருப்பத்தூா் மாவட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் குடும்ப வன்முறை சட்டம் 2005-ன் படி பா... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தழிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் தி... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..?தேசிய சுகாதாரத் திட்டத்தில் வேலை!

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப... மேலும் பார்க்க