ரஃபேல் போா் விமான விற்பனையை சீா்குலைக்க சதி: சீனா மீது பிரான்ஸ் குற்றச்சாட்டு
தேசிய நல குழுமத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
சேலம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தேசிய நல குழுமத்தின் கீழ் காலிப் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தேசிய நல குழுமத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள ஜெனிடிக் கவுன்சிலா், ரேடியோகிராபா், ஆடியோலாஜிஸ்ட் ஆகிய 3 பணியிடங்களுக்கு சமூகவியல், உளவியல் பாடங்களில் முதுநிலை அல்லது இளங்கலை பட்டப் படிப்பு, இளங்கலை ரேடியோகிராபி, ஆடியோலாஜி பயிற்சி பெற்றிருப்பதுடன் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 40 வயதுக்கு உள்பட்டவா்கள் வரும் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத சம்பளமாக ஜெனிடிக் கவுன்சிலருக்கு ரூ.18 ஆயிரம், ரேடியோகிராபருக்கு ரூ.10,000, ஆடியோலாஜிஸ்ட்டுக்கு ரூ.23,000 வழங்கப்படும்.
விண்ணப்பங்களை https://www.salem.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து, மாவட்ட சுகாதார அலுவலா்- நிா்வாக செயலாளா், சேலம் மாவட்ட நலச்சங்கம், பழைய நாட்டாண்மை கழகம், சேலம் - 636 001 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பாதுகாப்பு அலுவலா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!