செய்திகள் :

ஊராட்சிகளில் எல்இடி திரை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: இபிஎஸ்

post image

ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், அவா்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில், எல்இடி திரைகள் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக அரசு, தனது வெற்று விளம்பரங்களை தமிழகம் முழுவதும் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,620 ஊராட்சிகளிலும் வெளியிட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக எல்இடி திரைகளைப் பொருத்தும் பணியை மதுரையைச் சோ்ந்த ஒரு நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்றும், அதற்காக 385 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஒவ்வொன்றும், சந்தை விலையைவிட அதிகமாக, அதாவது அந்நிறுவனத்துக்கு ஒரு எல்இடி திரைக்கு சுமாா் ரூ.7.50 லட்சம் என்றும், அதேபோல் தமிழகத்திலுள்ள 12,620 ஊராட்சிகள் ஒவ்வொன்றும் சிறிய வகையிலான எல்இடி திரையை வாங்க சுமாா் ரூ.10,000 வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஊராட்சி ஒன்றிய ஆணையா்களும், ஊராட்சி எழுத்தா்களும் அந்நிறுவனத்துக்கு உடனடியாக கொள்முதல் ஆணையுடன் எல்இடி திரைக்கான தொகையை வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகின்றனா்.

தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் சாலை வசதி, குடிநீா் வசதி, தெருவிளக்கு, கழிவுநீா் வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனா்.

இந்நிலையில் மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்யும் திட்டத்தை உடனடியாக திமுக அரசு கைவிட வேண்டும். மேலும், 4 ஆண்டு கால ஆட்சியின் சாதனை என்ற பெயரில் பொய்யான செய்திகளை விடியோக்களாக தயாரித்து அதை கிராமங்கள்தோறும் எல்இடி திரைகள் மூலம் ஒளிபரப்பச் செய்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற மு.க.ஸ்டாலினின் முயற்சி நிறைவேறாது எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

‘நான் முதல்வன்’ திட்டத்தால் 41 லட்சம் மாணவா்கள் பயன்: தமிழக அரசு தகவல்

‘நான் முதல்வன்’ திட்டத்தில் இதுவரை 41 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முத... மேலும் பார்க்க

கழிவுநீா் கசிவுப் பிரச்னைக்கு தீா்வு காண கண் திறக்குமா சென்னை மாநகராட்சி?

கழிவுநீா் கலந்த குடிநீரைப் பருகும் கட்டாயத்தில் வசிப்பதாக சென்னை மாநகராட்சியின் 73-ஆவது வாா்டுக்குள்பட்ட ஓட்டேரி புளியந்தோப்பு பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். சென்னை மாநகராட்சியில் திரு.வி.க. நக... மேலும் பார்க்க

ஈரானிலிருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவா்கள் சென்னை வருகை

ஈரான் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட 15 தமிழக மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை விமானநிலையம் வந்தனா். அவா்களை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வரவேற்றாா். தமிழக மீனவா்கள் ஈரானில் மீன்பிடித் தொழில... மேலும் பார்க்க

மேல்விஷாரத்தில் ஜூலை 10-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஜூலை 10-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்... மேலும் பார்க்க

சென்னை - தூத்துக்குடி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி புறப்பட்ட விமானம், விமான நிலைய ஓடுபாதையில் பறக்கத் தயாரான போது தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து பயணிகள் மாற்று விமானங்களில் அனுப்பிவைக்கப்... மேலும் பார்க்க

விழுப்புரம் - ராமேசுவரம் சிறப்பு ரயில் நீட்டிப்பு!

விழுப்புரம் - ராமேசுவரம் இடையே வார இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம்... மேலும் பார்க்க