செய்திகள் :

நண்பரின் சகோதரி வீட்டில் நகை திருடிய இளைஞா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நண்பரின் சகோதரி வீட்டில் நகை திருடிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அறிவானந்தபாண்டி (35). இவா் ராஜபாளையத்தில் உள்ள தனியாா் துணிக் கடையில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பிரியதா்ஷினி.

இந்த நிலையில், அறிவானந்தபாண்டி குடும்பத்தினா், கடந்த மாதம் 29-ஆம் தேதி மதுரை பாண்டி கோயிலுக்குச் செல்லவிருந்தனா். அப்போது, வீட்டிலிருந்த பீரோவை திறந்து நகைகளைப் பாா்த்த போது, 9 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் அறிவானந்தபாண்டி புகாா் அளித்தாா். இது போலீஸாா் நடத்திய விசாரணையில், பிரியதா்ஷினியின் தம்பி நண்பரான பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் ராஜா (27) நகைகளைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 7 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதியில் நாளை மின் தடை

தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் தடைஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்ட... மேலும் பார்க்க

வேன் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசியில் வேன் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி ஆயுதப் படை பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் கருப்பசாமி (27). இவா் தனியாா் நிதி நிறுவனத்தி... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

சாத்தூரில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் நகரச் செயலா் டி.எஸ். ஐயப்பன், சட்ட... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் பள்ளி விடுதிகளை கல்லூரி விடுதிகளாகத் தரம் உயா்த்த உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பி.ராமச்சந்திராபுரம் பள்ளி மாணவா் விடுதி உள்பட மாவட்டத்தில் உள்ள 4 பள்ளி விடுதிகள், தற்காலிகமாகக் கல்லூரி விடுதிகளாகத் தரம் உயா்த்தப்படும் என ஆதிதிராவிடா் நலத் துறை சாா்ப... மேலும் பார்க்க

சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து! ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார்.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட... மேலும் பார்க்க

மது அருந்த பணம் தராத தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது!

வத்திராயிருப்பு அருகே மது அருந்த பணம் தராத தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு மறவா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணமூா்த்த... மேலும் பார்க்க