செய்திகள் :

தவெக தலைவர் விஜய் பயணிக்கும் ஜெட் விலை இவ்வளவா? என்னவெல்லாம் இருக்கும்?

post image

ஒரே நேரத்தில் சினிமா துறையிலும், அரசியலிலும் பயணித்து வரும் நடிகரும் தவெக தலைவருமான விஜய் அண்மைக் காலமாக பயன்படுத்தும் தனியார் ஜெட் விமானம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

அவ்வப்போது படப்பிடிப்பு மற்றும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்க விஜய் பல்வேறு ஊர்களுக்கும் பயணிக்க வேண்டி இருப்பதால், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் அவர் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பயணித்து வருகிறார்.

ஹாக்கர் 800எக்ஸ்பி என்ற ஜெட் விமானம், விஜய்க்கு சொந்தமானது என்று கூறப்பட்டாலும் அது எந்தவிதத்திலும் உறுதி செய்யப்படவில்லை.

பெரும்பாலும், அவர் திரைப்பட படப்பிடிப்புகள், அரசியல் நிகழ்வுகளுக்கு, இந்தியாவுக்குள் பயணம் மேற்கொள்ளும்போது, இந்த ஜெட் விமானத்தையே பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த விமானத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8 கோடி என்றும், ஒரு நாளைக்கு இதில் பயணிக்க வாடகை என்றால், ரூ.14 லட்சம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஜெட் விமானத்தின் உள்ளமைப்புகளை, தலைவர்களுக்கு ஏற்ப நவீன வசதிகளுடன் மாற்றியிருந்தால், அதற்கான விலை இன்னும் சில கோடிகளைத் தொடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இது விமானத்தின் விலை மற்றும் வாடகைதான். அது மட்டுமல்லாமல், இந்த விமானத்தின் பராமரிப்பு செலவு, விமானி, பணிப்பெண்களுக்கான ஊதியம் எல்லாம் பார்த்தால் பயன்பாட்டுக் கட்டணமே சில லட்சங்கள் எகிறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் 8-14 பேர் வரை பயணிக்கலாம். சொகுசு நாற்காலிகள், ஆலோசனை அரங்கு, பொழுதுபோக்கு அம்சங்கள், சிறு மதுபானக் கூடம், செயற்கைக்கோளில் இயங்கும் தொலைபேசி வசதிகள் இருக்கும். இந்த விமான பயணத்துக்கு, 2 விமானிகள், தேவைக்கு ஏற்ப 1 அல்லது 2 பணிப்பெண்கள் இருப்பர்.

அண்மையில், படப்பிடிப்புக்காக கொடைக்கானல் சென்று படப்பிடிப்பு முடித்துவிட்டு, அவர் மதுரையில் இருந்து சென்னைக்குத் திரும்பவும் இந்த ஜெட்டைத்தான் பயன்படுத்தியிருந்தார்.

கணவர் இறந்தது தெரியாமல்..எலி செத்ததாக நினைத்திருந்த மனைவி!

கோவையில் கணவன் இறந்து கிடந்தது தெரியாமல் வீட்டிற்குள் வசித்த மனைவி, துர்நாற்றத்தை எலி செத்ததால் வந்தது என நம்பிய சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர... மேலும் பார்க்க

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை: அண்ணாமலை விமர்சனம்

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவ, மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள், ம... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு: தவெக போராட்டத்துக்கு அனுமதி!

அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக தவெக நடத்தவுள்ள போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டாா். இந்த விவக... மேலும் பார்க்க

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம்!

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளோட்டம் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சேலம் மாநகரின் காவல் தெ... மேலும் பார்க்க

தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு ... மேலும் பார்க்க

சென்னையில் ஜப்பான் கடற்படை கப்பல்!

சென்னை துறைமுகத்துக்கு ஜப்பான் கடலோரக் காவல்படையின் இஸ்டுகுஷிமா கப்பல் வருகை தந்துள்ளது.சென்னை வருகை தந்துள்ள இஸ்டுகுஷிமா கப்பல் மற்றும் ஜப்பான் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த வீரர்களை இந்திய கடலோரக் கா... மேலும் பார்க்க