செய்திகள் :

மும்பை அருகே கடலில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகு மாயம்: தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள்

post image

நேற்று இரவு மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் அருகில் ரேவ்தந்தா என்ற இடத்தில் பாகிஸ்தான் கப்பல் ஒன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. இதனை இந்திய கடற்படையினர் ரேடார் மூலம் கண்டுபிடித்தனர். இதையடுத்து கடலோர பாதுகாப்பு படை உஷார்படுத்தப்பட்டது. முப்படைகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அக்கப்பலை தேட ஆரம்பித்தனர். அது பாகிஸ்தான் மீன்பிடி படகாக இருக்கலாம் என்று கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். கடல் சீற்றம் மற்றும் காற்று, மழை போன்ற காரணங்களால் பாகிஸ்தான் படகு இந்திய எல்லைக்குள் இழுத்து வரப்பட்டு இருக்கலாம் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

இது குறித்த தகவல் கேள்விப்பட்டதும் வெடிகுண்டை கண்டு பிடித்து செயல் இழக்க செய்யும் படை, விரைவு படை, கடலோர மற்றும் கப்பல் படை பிரிவுகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து இருக்கிறது. இந்திய எல்லைக்குள் இருக்கும் கொர்லாய் என்ற இடத்தில் இருந்து இரண்டு கடல் மைல் தூரத்தில் பாகிஸ்தான் படகு தென்பட்டது. அந்த படகை அடையாளம் காணும் முன்பாக அது மாயமாகி இருக்கிறது. கடற்படை ஹெலிகாப்டர்கள் அப்படகை தேடி வருகின்றன. ராய்கட் போலீஸ் அதிகாரி தலால் அதிகாரிகளுடன் வந்து படகு தென்பட்ட இடத்தையும் தேடும் பணியையும் நேரில் பார்வையிட்டார். கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் இரவோடு இரவாக மும்பைக்குள் நுழைந்து மூன்று நாள் தாக்குதல் நடத்தினர். இப்போதும் மும்பை அருகில் பாகிஸ்தான் படகு தென்பட்டுள்ளது. இதனால் மும்பை, ராய்கட் கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வேலூர்: `அது, ஜி.ஹெச் இல்லை... வெற்றுக் கட்டடம்’ - கொதிக்கும் அதிமுக; மறுக்கும் திமுக

வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில், ரூ. 197.81 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஏழு தளங்களுடன்கூடிய பல்துறை உயர்சிறப்பு மருத்துவமனைக் கட்டடம் பிரமாண்டமாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ... மேலும் பார்க்க

விழுப்புரம்: வலது காலுக்குப் பதில் இடது காலில் அறுவை சிகிச்சை; மயக்கம் தெளிந்து அதிர்ச்சியான நோயாளி

விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் அருகேயுள்ள விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனியார் பேருந்து ஓட்டுநர் மாரிமுத்து. இவருக்கு வலது கால் முட்டியில் ஜவ்வு கிழிந்த நிலையில் அதிக வலியால் அன்றாடம் அவதிப்ப... மேலும் பார்க்க

``LGBTQ+ தோழர்கள் மனம் நோகும்படி பேசிவிட்டேன்; அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்'' - திருமா விளக்கம்

கடந்த பிப்ரவரி 12 அன்று கோவை - வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த 'மாணவர் பாராளுமன்றம்' என்னும் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார் விசிக தலைவர் திருமாவளவன். இதில் 'LGBTQ+' குறித்து மாணவர் ஒருவரி... மேலும் பார்க்க

பாளையங்கோட்டை: மேம்பாலம் பஸ் நிறுத்தங்களில் இருக்கை வசதிகள் இல்லை – பொதுமக்கள் கோரிக்கை!

திருநெல்வேலி: நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே அமைந்துள்ள செல்லப்பாண்டி மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தங்கள், பயணிகளுக்குத் தேவையான இருக்கை வசதிகள் இல்லாமல் உள்ளன. இதனால் தினசரி பயணிக்கும் பொதுமக்கள் க... மேலும் பார்க்க

காவல்துறை தாக்குதலில் பலியான அஜித்குமார் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி; என்ன நடந்தது?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரைத் திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: ரயில் பெட்டிகளில் தங்கும் அறை வசதி... புது அனுபவத்தை அறிமுகப்படுத்தும் ரயில்வே துறை!

புதிய பாம்பன் பாலம்புனித தலமாக விளங்கும் ராமேஸ்வரத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவை தவிர வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா... மேலும் பார்க்க