பெரியாங்குப்பம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஆம்பூா்: ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் சுயம்பு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் அடுத்த பெரியங்குப்பம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள சுயம்பு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
திங்கள்கிழமை கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தரிசனம் செய்தாா். கோயில் செயல் அலுவலா் பா. வினோத்குமாா், கும்பாபிஷேக விழாக்குழுவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.