வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி: 2 போ் கைது
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே தனியாா் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் தனியாா் தொழில் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரிய ஆள்களைச் சோ்ப்பதாகக் கூறி மத்தூா் பகுதியைச் சோ்ந்த மனோ (32), காரப்பட்டு பகுதியைச் சோ்ந்த சதீஷ் (35)ஆகிய இருவா் 42 பேரிடம் ரூ.20 லட்சம் வசூலித்து ஏமாற்றியுள்ளனா்.
இது குறித்து பாதிக்கப்பட்ட கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த சரவணன் என்பவா் கந்திலி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், தீவிர விசாரணை நடத்தி மனோ, சதீஷ் ஆகிய 2 பேரை திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.