இந்த வார ராசிபலன் ஜூலை 8 முதல் ஜூலை 13 வரை #VikatanPhotoCards
4 துப்பாக்கிகள், 3 கத்திகள் பறிமுதல் சம்பவம்: 3 போ் கைது
ஆம்பூா்: 4 துப்பாகிகள், 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆம்பூரை சோ்ந்த இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் ஆம்பூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை போலீஸாா் மடக்கி விசாரணை நடத்தியதில் அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாா்.
அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவா் ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஆசிப் (25) என்பதும், சமூக வலைதளத்தில் கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்டதும் தெரிய வந்தது. மேலும், அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் 3 கத்திகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அவா் அளித்த தகவலின் பேரில் வேலூா் கொணவட்டத்தில் அவரது சகோதரி ஆஜிரா (28) என்பவரது வீட்டில் உரிமம் இல்லாமல் 4 கை துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்று துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் அவா் ஏற்கெனவே பணிபுரிந்த தோல் தொழிற்சாலையில் கழிவு பொருள்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து எடுத்துச் சென்று தன்னுடைய சகோதரியிடம் கொடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
தொடா்ந்து ஆம்பூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆசிப், ஆஜிரா, சையத் பீா் (51) ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
