செய்திகள் :

ராமேஸ்வரம்: ரயில் பெட்டிகளில் தங்கும் அறை வசதி... புது அனுபவத்தை அறிமுகப்படுத்தும் ரயில்வே துறை!

post image
புதிய பாம்பன் பாலம்

புனித தலமாக விளங்கும் ராமேஸ்வரத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவை தவிர வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர். இதையடுத்து பாம்பன் கடல் மீது கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தினை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சுமார் 30 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர வட மாநில யாத்திரைகளின் வசதிக்காக தனியாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் ரயில்களின் மூலம் ராமேஸ்வரம் வரும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் ரயில்பெட்டி தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

தங்கும் அறைக்கான ரயில் பெட்டி

இதன்படி ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு விட ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்கென 5 ரயில் பெட்டிகள் ஒதுக்கப்பட உள்ளன. இந்த ரயில் பெட்டிகளின் உட்புறங்களில் உரிய மாற்றங்கள் செய்து தங்கும் அறைகளாக மாற்றம் செய்து கொள்ள தனியாருக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதன் பின்னர் வரையறுக்கப்பட்ட கட்டணத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.

இந்த புதிய அனுபவத்திலான தங்கும் அறைகளை 5 ஆண்டுகள் நடத்துவதற்கான உரிமையினை பெறுவதற்கான டெண்டரினை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மின்னணு வாயிலாக இந்த ஒப்பந்த புள்ளியினை ஜூலை 15 அன்று மதியம் 12 மணிக்குள் சமர்பிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேல் விபரங்களை www.ireps.gov.in என்ற இணையதளம் மூலம் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MAHER UNIVERSITY: மெஹர் பல்கலை வேந்தர் இல்லத் திருமண விழா!

சென்னை, மீனாட்சி மற்றும் ஸ்ரீமுத்துக்குமரன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மறைந்த திரு.A.N ராதாகிருஷ்ணன் - திருமதி. கோமதி ராதாகிருஷ்ணன் அவர்களின் பேரனும், திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன் திரு. பிரபாகர் எ... மேலும் பார்க்க

Tantea:‌ `உடலை உரமாக்கி உழைக்கும் எங்கள் சாவுக்கு டிராக்டரை அனுப்புகிறது அரசு'- தொழிலாளர்கள் குமுறல்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இலங்கையின் மலைப்பிரதேசங்களில் தேயிலை, காஃபி பயிர்களுக்கான பெருந்தோட்டங்கள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டன. காடு, மலைகளை‌ அழித்து தோட்டங்களை உருவாக்க தமிழ்நாட்டின் ... மேலும் பார்க்க

துணைவேந்தர்கள் நியமனம்: "4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்" - உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.அதில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்... மேலும் பார்க்க

`உங்களைப் பார்த்தால் பயமா இருக்கு..’ - கொதித்துப் பேசிய கவுன்சிலர்கள்; மரபை மீறிய வேலூர் மேயர்!

வேலூர் மாநகராட்சியில், நிர்வாகச் சொதப்பல் காரணமாக பல்வேறு பணிகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் குவிந்திருக்கின்றன. இந்த நிலையில், மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மதியம் நடைபெற்ற மா... மேலும் பார்க்க

Ration goods: கவனம் பெரும் `இல்லம் தேடி ரேஷன்' - முதல்கட்ட சோதனையில் 10 மாவட்டங்கள்!

தமிழ் நாட்டில் சென்னை, ராணிப்பேட்டை உள்பட 10 மாவட்டங்களில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் ஜூலை 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் முதல்கட்டமாக 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற... மேலும் பார்க்க