சென்னையில் ஜப்பான் கடற்படை கப்பல்!
சென்னை துறைமுகத்துக்கு ஜப்பான் கடலோரக் காவல்படையின் இஸ்டுகுஷிமா கப்பல் வருகை தந்துள்ளது.
சென்னை வருகை தந்துள்ள இஸ்டுகுஷிமா கப்பல் மற்றும் ஜப்பான் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த வீரர்களை இந்திய கடலோரக் காவல்படையினர் மற்றும் என்சிசி மாணவர்கள் வரவேற்றனர்.
இன்று (ஜூலை 7) முதல் ஜூலை 12 வரை இருநாட்டு கடலோரக் காவல்படையினரும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக இந்திய கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
இந்த பயணமானது, இந்தியா - ஜப்பான் இரு நாடுகளுக்கு இடையேயான கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் ஆழமான நட்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பயிற்சியைத் தொடர்ந்து சிங்கப்பூர் செல்லவிருக்கும் இஸ்டுகுஷிமா கப்பலில், இந்திய கடலோரக் காவல்படையின் நான்கு வீரர்களும் உடன் செல்லவுள்ளனர்.
இஸ்டுகுஷிமா கப்பலில் ஜப்பான் கடலோரக் காவல்படையின் 53 வீரர்கள் சென்னைக்கு வருகை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
The Japanese Coast Guard ship Istukushima has arrived at the Chennai port.