செய்திகள் :

திமுக ஆட்சியில் மின்கட்டணம் 52% உயர்வு: இபிஎஸ்

post image

திமுக ஆட்சியில் மின்கட்டணம் 52 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் இன்றைய தொடக்க நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், தேர்தலையொட்டிய பிரசாரத்தின் ஒரு பகுதியாக, சாலை பவனியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார்.

அப்போது அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் திமுக அரசு முடக்கிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

''அதிமுக - பாஜக கூட்டணி இயல்பானது. தேர்தல் கூட்டணி என்பது எதிரிகளை வீழ்த்த வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக அமைப்பது. அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம். மேலும், பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நியாபக மறதியா? 1999-ல் பாஜக உடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா? மத்தியில் 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மாநிலத்திற்காக திமுக எதையும் செய்யவில்லை.

சட்டம் - ஒழுங்கு சீர்கேடு

கொள்ளை அடிப்பதே திமுகவின் நோக்கம். திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இதுவரை 52% வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; பொதுவெளியில் பெண்கள் நடமாடக் கூட முடியவில்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

அஜித் குமார் என்ற இளைஞரை காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர்.

மத்தியில் வலுவான ஆட்சியை நாங்கள் கொண்டுள்ளோம். தமிழ்நாட்டில் வரும் தேர்தலோடு திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். அளித்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றியுள்ளீர்கள்?. தீய சக்தியான திமுக வரும் தேர்தலில் அகற்றப்பட வேண்டும்.

அம்மா மினி கிளினிக் திட்டத்தை ரத்து செய்துவிட்டார்கள். அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதையும் படிக்க | அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின்

Opposition Leader Edappadi Palaniswami has alleged that electricity tariffs have been increased by up to 52 percent under the DMK regime.

தமிழகத்தின் நாளைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நாளைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்தின் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். அதிமுகவின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப் பயணத்தின் தொடக்க நிகழ்ச்... மேலும் பார்க்க

அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின்

அரசு சார்பில் பிறப்பிக்கப்படும் அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது,நான்கு மணி நேரம்... மேலும் பார்க்க

தமிழகத்தில் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் சாலை, மேம்பால பணிகளுக்காக ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை இன்று(ஜூலை 7) வெளியிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 3,268 கி.மீ. சாலை மற்றும் மேம்பால பணிகளுக்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டு... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்கள் மூடலா? - அமைச்சர் கீதா ஜீவன் மறுப்பு!

தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவ... மேலும் பார்க்க

கணவர் இறந்தது தெரியாமல்..எலி செத்ததாக நினைத்திருந்த மனைவி!

கோவையில் கணவன் இறந்து கிடந்தது தெரியாமல் வீட்டிற்குள் வசித்த மனைவி, துர்நாற்றத்தை எலி செத்ததால் வந்தது என நம்பிய சோக சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர... மேலும் பார்க்க

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை: அண்ணாமலை விமர்சனம்

விடுதிகளின் பெயர் மாற்றத்தால் மாணவ, மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள், ம... மேலும் பார்க்க