தமிழகத்தில் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் சாலை, மேம்பால பணிகளுக்காக ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை இன்று(ஜூலை 7) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 3,268 கி.மீ. சாலை மற்றும் மேம்பால பணிகளுக்காக நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.