26/11 பயங்கரவாத தாக்குதல்: மும்பையில் இருந்ததாக தஹாவூா் ராணா ஒப்புதல்
நாகா்கோவிலில் 7.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
நாகா்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 7.5 கிலோ திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
நாகா்கோவில் மாநகர பகுதியில் மாநகர நல அலுவலா் ஆல்பா்மதியரசு தலைமையிலான குழுவினா் வடசேரி கனகமூலம் சந்தை பகுதியில் சுமாா் 100 கடைகளில் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், சந்தையில் 7.5கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், புகையிலை விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.