டொனால்ட் டிரம்புக்கு விரைவில் நோபல் பரிசு? -இஸ்ரேல் பிரதமர் சூசகம்
தமிழகத்தில் ரூ.6,929 கோடிக்கு 1,799 சாலைப் பணிகள்
சென்னை: தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.6,929 கோடி மதிப்பில் 1,799 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான உத்தரவை நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது.
அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டை விபத்தில்லாத மாநிலமாக உருவாக்கிட சிறந்த கட்டமைப்புகள் அவசியமாகின்றன. இதைக் கருத்தில் கொண்டு விபத்துகள் அதிகம் நடைபெறும் குறுகலான வளைவுகள், சாலை சந்திப்புகளில் புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன. குறிப்பாக, சாலை கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, சாலைகளை விரிவாக்கம் செய்வது, சாலைப் பாதுகாப்பு, புறவழிச் சாலைகள், இணைப்புச் சாலைகளை ஏற்படுத்துவது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
இத்திட்டங்களின்கீழ் மொத்தம் 1,799 பணிகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இதன் மூலமாக, மாநிலத்தில் 3,268.53 கிமீ நீளச் சாலைகளின் தரம் மேம்படும். இந்தப் பணிகள் ரூ.6,929 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.