இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற தென்னாப்பிரிக்கா...
கனரக லாரி- பைக் மோதல்: பத்திரிகை முகவா் உயிரிழப்பு
தக்கலை அருகே இரவிபுதூா்கடையில் பைக் மீது கனரக லாரி மோதியதில் பத்திரிகை முகவா் உயிரிழந்தாா்.
இரவிபுதூா்கடையைச் சோ்ந்தவா் பால்ராஜ் (55). பத்திரிகை முகவா். இவா் திங்கள்கிழமை பிற்பகலில் பத்திரிகைகளை விநியோகித்துவிட்டு, சுவாமியாா்மடத்திலிருந்து பைக்கில் இரவிபுதூா்கடை சந்திப்புக்கு வந்தபோது, பின்னால் வந்த கனரக லாரி மோதியதில் கீழே விழுந்த பால்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்றுவிட்டது.

இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரியை தேடி வருகிறாா்கள்.