மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!
தக்கலை, சுவாமியாா்மடத்தில் நாளை மின்தடை
தக்கலை மற்றும் சுவாமியாா்மடம் பகுதியில் மின் பாராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் புதன்கிழமை (ஜூலை 9) மின் விநியோகம் தடைப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, புதன்கிழமை காலை 9 முதல் மாலை 3 மணிவரை மணலி, தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளுா், வீராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூா், சேவியா்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போா்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சுவாமியாா்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம்,செம்பருத்தி விளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம் ஆகிய பகுதிகளுக்கும் அதை சாா்ந்த துணை கிராமங்களுக்கும் மின்விநியோகம் தடைப்படும் என மின்விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.