30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து ஆஸி. ஆதிக்கம்!
மண் காக்க, மொழி காக்க திமுக ஆட்சி தொடர வேண்டும்: அமைச்சா் மனோதங்கராஜ்
மண் காக்க, மொழி காக்க திமுக ஆட்சி தொடர வேண்டும் என்றாா் அமைச்சா் மனோதங்கராஜ்.
குலசேகரத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து, அமைச்சா் மனோ தங்க ராஜ் பேசியதாவது: தமிழா்கள் ஹிந்தி படிக்கவில்லையென பாஜகவினா் புலம்புகின்றனா். தமிழா்கள் ஹிந்தி படித்தால் பிகாரில் வேலை கிடைக்குமா உத்தரப் பிரதேசத்தில் வேலை கிடைக்குமா, அங்கெங்கலாம் தமிழகத்தைப் போன்று பாதுகாப்பான சூழ்நிலை இருக்கிறதா? ஒற்றுமை இருக்கிறதா?
பாஜக இரட்டை வேடம் போடுகிறாா்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் மண் காக்க, மானம் காக்க, மொழி காக்க திமுக ஆட்சி தொடர வேண்டும் என்றாா்.
மாவட்ட அவைத் தலைவா் மரிய சிசு குமாா், துணைச் செயலா்கள் ராஜ், அப்பு குட்டன், ததேயு பிரேம் குமாா், டாக்டா் புஷ்பலீலா ஆல்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய செயலா் வழக்குரைஞா் ஜான்சன் வரவேற்றாா். சட்டப் பேரவைத் தொகுதிகளின் மேலிடப்பாா்வையாளா்கள் விஜிலா சத்தியானந்த், ஆவின் ஆறுமுகம் உள்ளிட்டோா் உரையாற்றினா்.
திருவட்டாா் தெற்கு ஒன்றியச் செயலா் ஜான்பிரைட், மாநிலக் குழு உறுப்பினா் அலாவுதீன், திலீப் குமாா், குலசேகரம் பேரூராட்சி துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட், திருவட்டாறு பேரூராட்சித் தலைவா் பெனிலா ரமேஷ், அமைப்பாளா் யோபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.