செய்திகள் :

”கார் மீது லோடு ஆட்டோ மோதி விபத்து”- நான்கு பேர் பலி; சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்

post image

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (57). இவரின் மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30), மகன் ஸ்டாலின் (36), இவரது மனைவி துர்கா (32) சிறுமி நிவேனி சூரியா (3). இவர்கள் குடும்பமாக காரில் கும்பகோணத்திற்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றுவிட்டு இன்று காலை தஞ்சாவூருக்குத் திரும்பியிருக்கிறார்கள். அப்போது, கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், உதாரமங்கலம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லோடு ஆட்டோ ஒன்று ராங்க் ரூட்டில் வந்துள்ளது.

கார் மீது லோட்டு மோதி விபத்து 4 பேர் பலி

இதில் இரு வாகனங்களை ஓட்டியவர்களும் தடுமாற கண்ணிமைக்கும் நேரத்தில் லோடு ஆட்டோவும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகே வயலில் விவசாய வேலை செய்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் காரில் இருந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் ஜெயா, மூன்று வயது சிறுமி நிவேனி சூரியா, குமார், துர்கா ஆகிய நான்கு பேரும் பலியாகினர். மோனிஷா, ஸ்டாலின், லோடு ஆட்டோ டிரைவர் விக்னேஷ் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், ``கும்பகோணத்தில் இருந்து கார் தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது. விவசாயப் பணிகளுக்காக நாற்றுக்கட்டுக்களை ஏற்றிக்கொண்டு வந்த லோடு ஆட்டோ ராங் ரூட்டில் வந்துள்ளது.

விபத்து நடந்த இடம்

இதில் இரு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. வாகனங்கள் மோதிக் கொண்டதும் காருக்குள் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மீட்புப் பணியில் ஈடுப்பட்டனர். விபத்து குறித்து தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்றனர்.

Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விமான சேவைகள்!

இத்தாலியில், விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த சம்பவமானது மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில... மேலும் பார்க்க

கடலூர்: 50 மீட்டர் துரம் தூக்கி வீசப்பட்ட வேன்; 3 மாணவர்கள் உயிரிழந்த ரயில் விபத்தின் முழு பின்னணி

50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி வேன்கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றின் வேன், இன்று காலை 7.30 மணிக்கு மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. 7.45 மண... மேலும் பார்க்க

கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - மாணவர்கள், குழந்தைகள் படுகாயம்!

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி வேன் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்... மேலும் பார்க்க

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடித்து தரைமட்டமான 16 அறைகள்; மீட்பு பணி காட்சிகள்..

பட்டாசு ஆலை வெடி விபத்துபட்டாசு ஆலை வெடி விபத்துபட்டாசு ஆலை வெடி விபத்து; மீட்பு பணி காட்சிகள்பட்டாசு ஆலை வெடி விபத்து; மீட்பு பணி காட்சிகள்பட்டாசு ஆலை வெடி விபத்து; மீட்பு பணி காட்சிகள்மீட்பு பணி காட... மேலும் பார்க்க

நாமக்கல்: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அரசு ஊழியர்கள்... குடும்பப் பிரச்னையில் விபரீதம்!

நாமக்கல் மாவட்டம், தில்லைபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(54), திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா(50), ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில... மேலும் பார்க்க

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலை, சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமானது. இந்த பட்டாசு ஆலை நாக்பூரை... மேலும் பார்க்க