செய்திகள் :

நாமக்கல்: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அரசு ஊழியர்கள்... குடும்பப் பிரச்னையில் விபரீதம்!

post image

நாமக்கல் மாவட்டம், தில்லைபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(54), திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா(50), ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி பிரமிளா, நாமக்கல் வகுரம்பட்டி பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். உடனடியாக அப்பகுதி மக்கள் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ரயில் காவல்துறை மற்றும் நாமக்கல் காவல்துறையினர் சென்று சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுப்பிரமணி, பிரமிளா

முதற்கட்ட விசாரணையில், சுப்பிரமணியின் மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில், மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார். இதனால் இருவரும் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று இரவு வீட்டில் சுப்பிரமணியின் மகள் கூறியவுடன், சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி பிரமிளா வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவர்களை மகள் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை அரசு ஊழியர்கள் இருவரும் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம், நாமக்கல்லில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு, ஐந்து பேர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலை, சிவகாசி திருத்தங்கல்லை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமானது. இந்த பட்டாசு ஆலை நாக்பூரை... மேலும் பார்க்க

ஊட்டி: மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், அலறித்துடித்த பயணிகள்! என்ன நடந்தது?

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த 22 பேர் துக்க நிழவு ஒன்றில் பங்கேற்பதற்காக தனியார் வாடகை வேன் மூலம் நேற்று காலை ஊட்டிக்குச் சென்றிருக்கிறார்கள். துக்க நிகழ்வை முடித்துக் கொண்டு குன்னூர் மலை... மேலும் பார்க்க

Kerala: மருத்துவமனை இடிந்து பெண் பலி; ``ஆபரேஷன், சிகிச்சை வசதி எங்கும் இல்லை'' - காங்கிரஸ் கண்டனம்

கேரள மாநிலம் கோட்டையம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 68 ஆண்டுகள் பழமையான 3 மாடி கட்டடத்தின் டாய்லெட் பகுதி நேற்று உடைந்து விழுந்தது. டாய்லெட்டில் குளிக்கச் சென்ற தலையோலப்பறம்பு பகுதியைச் சேர... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏழு பேர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம் - சாத்தூர் அதிர்ச்சி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் அதிகாலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தினால் ஆலையில் உள்ள 8 அறைகள் வெட... மேலும் பார்க்க

தெலங்கானா தொழிற்சாலை விபத்தில் 34 பேர் உயிரிழப்பு; விபத்திற்கு காரணம் என்ன?

நேற்று காலை, 8.15 - 9.35 மணியளவில், தெலங்கானா, சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து தொழிற்சாலை ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தொழிற்சாலையில் இருந்த ரியாக்டர் வெடித்தது தான் இந்த விபத்திற்... மேலும் பார்க்க

Plane crash: ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிட்ட சதியா? - மத்திய இணையமைச்சர் முரளிதர் சொல்வதென்ன?

கடந்த மாதம் அகமதாபாத்தில் 274 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்து, நாசவேலை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) விசாரித்து வருவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் த... மேலும் பார்க்க