ரஃபேல் போா் விமான விற்பனையை சீா்குலைக்க சதி: சீனா மீது பிரான்ஸ் குற்றச்சாட்டு
ஜூன் மாதத்தில் மின்சார கார்களின் விற்பனை அதிகரிப்பு!
சென்னை: ஜூன் 2025ல் மின்சார கார்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் கார் விற்பனை கடந்த மாதம் சரிந்ததாக தெரிவித்துள்ளது ஸ்ரீராம் ஃபைனான்ஸின் மொபிலிட்டி.
இதற்கிடையில், லாரி வாடகைகள் உறுதியாக இருந்தாகவும் அதன் அடிப்படையில் தில்லி-மும்பை-தில்லி அல்லது தில்லி-ஹைதராபாத்-தில்லி என பல்வேறு வழித்தடங்களில் 18 டன் பேலோடுகளுக்கான வாடகை அதிகரித்துள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், ஜூன் 2024 உடன் ஒப்பிடும்போது ஜூன் 2025ல் லாரி வாடகை 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மே 2025ல் இருந்த வாடகை விகிதங்களுடன் ஒப்பிடும்போது இது கடந்த மாதம் 1.3 சதவிகிதம் அதிகரிப்பு.
மாதாந்திர அடிப்படையில், மின்சார இரு சக்கர வாகனங்களின் விற்பனை 5 சதவிகிதம் அதிகரித்து 93,872 யூனிட்டுகளாக உள்ளது. மே 2025ல் இது 88,986 யூனிட்டுகளாக இருந்தது.
ஜூன் 2025ல் மின்சார கார்களின் விற்பனை 9,804 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இதுவே ஜூன் 2024ல் வெறும் 717 யூனிட்டுகளாக இருந்தது.
மாதாந்திர அடிப்படையில், மின்சார கார்களின் விற்பனை மே 2025ல் விற்கப்பட்ட 9,693 யூனிட்டுகளிலிருந்து 1 சதவீதம் அதிகரித்து 9,804 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
மின்சார வாகனங்களின் விற்பனையைப் பொறுத்தவரை, நுகர்வோர் ஆர்வம் மற்றும் முன்னணி வாகன உற்பத்தியாளர்களின் புதிய மாடல் வெளியீடுகளின் அலையால் இயக்கப்படும் முன்னறிவிப்புகளுக்கு முன்னதாகவே இது வேகமடைந்து வருவதாக தெரிவித்தார் ஸ்ரீராம் நிதி நிர்வாக இயக்குநர் ஒய்.எஸ். சக்ரவர்த்தி.
எரிபொருள் நுகர்வைப் பற்றி குறிப்பிடுகையில், ஜூன் 2025ல் பெட்ரோல் நுகர்வு 6.4 சதவிகிதம் அதிகரித்து 3.51 டன்னாக அதிகரித்தது. இதுவே ஜூன் 2024ல் இது 3.30 டன்னாக இருந்தது.
டீசல் நுகர்வு ஜூன் 2025ல் 1.2 சதவிகிதம் அதிகரித்து 8.08 டன்னாகவும், ஜூன் 2024ல் 7.98 டன்னாகவும் இருந்தது.
இதையும் படிக்க: மாருதி சுஸுகி விற்பனை 6% சரிவு