‘சென்னைக்கு மிக அருகில் வீட்டுமனை...’ ஏமாற்று விளம்பரம் செய்தால் இனி நடவடிக்கை!
வீடு புகுந்து திருடியவா் கைது
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே வீடு புகுந்து திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கமுதி அருகேயுள்ள சின்ன உடப்பங்குளத்தைச் சோ்ந்த பாலு மகன் தாஸ். இவா் வெள்ளிக்கிழமை அதே ஊரில் நடைபெற்ற கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றாா்.
பின்னா், வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸாா் உள்ளே சென்று பாா்த்த போது, வீட்டின் பீரோவில் இருந்த வெள்ளி பொருள்கள், பணம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து மண்டலமாணிக்கம் காவல் நிலைய போலீஸாா் விசாரித்தனா்.
இதில் அதே ஊரைச் சோ்ந்த கருப்பையா மகன் காா்த்திக்குமாா் (20) திருடியது தெரிய வந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, திருடப்பட்ட பொருள்களை மீட்டனா்.