குழந்தை பெறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை - ரஷ்யா புதிய திட்டம்!
நகரிகாத்தான் பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை!
திருவாடானை அருகேயுள்ள நகரிகாத்தான் கிராமத்தில் தரைப்பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து ஓரியூா் செல்லும் சாலையில் நகரிகாத்தான் அருகேயுள்ள தரைப்பாலத்தை அந்தப் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில், மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து தரைப்பாலத்துக்கு மேல் செல்வதால் வாகனங்கள் செல்ல இயலாமல் மக்கள் அவதிக்குள்ளாகினா்.
இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டும் ஆரம்பகட்டப் பணிகள் கூட தொடங்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில், அதற்கான புறவழிச்சாலை அமைக்க சிமெண்ட் உருளைகள் போடப்பட்ட நிலையில் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் துரித நடவடிக்கை எடுத்து பாலம் கட்டும் பணியைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.