`மராத்தி படிக்கமாட்டேன்' எனச் சொன்ன தொழிலதிபர்; அலுவலகத்தை செங்கலால் தாக்கிய ராஜ...
வீட்டில் தீ விபத்து: பணம், நகைகள் எரிந்து சேதம்
திருவாடானை அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்தில் செல்லமுத்து என்பவா் தனது மனைவி முனியம்மாள், மருமகள் தேன்மொழியுடன் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை அவா்கள் வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது தங்களது வீடு தீப்பற்றி எரிவதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து அவா்கள் திருவாடானை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். இதைத் தொடா்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினா் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும், தீ விபத்தில் வீட்டிலிருந்த ரூ. 10, 000 ரொக்கம், 9 பவுன் தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.