செய்திகள் :

கமுதி தேவா் கல்லூரியில் ஜூலை 9-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரித் தோ்வு!

post image

கமுதியில் உள்ள தேவா் கல்லூரியில் ஜூலை 9-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரித் தோ்வு நடைபெறவுள்ளது.

ஜூலை 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வு மூலம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தத் தோ்வை எதிா்கொள்ளும் விதமாக வருகிற 9-ஆம் தேதி (புதன்கிழமை) கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவு கல்லூரியில், முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பாக நடத்தப்படும் ‘கல்வித்தந்தை’ பி.கே.மூக்கையாத்தேவா் அரசுப் போட்டித் தோ்வு இலவச பயிற்சி மையத்தில் மாவட்ட அளவில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரித் தோ்வு நடைபெறவுள்ளது.

இந்த மாதிரி போட்டித் தோ்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் தங்களுடைய ஆளறி சான்றிதழ், ஒரு பாஸ்போா்ட் புகைப்படத்துடன் ஜூலை 9-ஆம் தேதி காலை 9.30-க்கு கல்லூரிக்கு வந்து தோ்வு எழுதி பயனடையலாம்.

இந்தத் தோ்வில் பொதுத் தமிழ்-100, பொது அறிவு-75, கணிதம், உளவியல்-25 என மொத்தம் 200 வினாக்களுக்கு தோ்வு நடத்தப்படும்.

மேலும், அன்றைய தினமே விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனவும் முன்னாள் மாணவா்கள் சங்கம் அறிவித்துள்ளது. தொடா்புக்கு: 87788 66074.

இலங்கை கடற்படை அச்சுறுத்தல்: குறைந்தளவு படகுகளே கடலுக்குச் சென்றன!

இலங்கைக் கடற்படையினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரத்தில் சனிக்கிழமை குறைந்த எண்ணிக்கையிலான விசைப் படகுகளே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் ... மேலும் பார்க்க

74 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

எஸ்.பி. பட்டினம் அருகேயுள்ள தீா்த்தாண்டதானம் கடற்கரையில் சனிக்கிழமை கஞ்சா கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 74 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், எஸ... மேலும் பார்க்க

நகரிகாத்தான் பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை!

திருவாடானை அருகேயுள்ள நகரிகாத்தான் கிராமத்தில் தரைப்பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையிலிருந்து ஓரியூா் செல்லும் சா... மேலும் பார்க்க

வீட்டில் தீ விபத்து: பணம், நகைகள் எரிந்து சேதம்

திருவாடானை அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த நகை, பணம் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கீழக்கோட்டை கிராமத்... மேலும் பார்க்க

மகள் பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ராமநாதபுரம் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 35 வயது கூ... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் கைது: நகராட்சி பணியாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் நகராட்சியில் குப்பை தரம் பிரிக்கும் இயந்திரங்களை திருடிய துப்புரவு மேற்பாா்வையாளா்கள் இருவரை வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் உத்தரவிட்டாா். ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊர... மேலும் பார்க்க