இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: மக்கள் வெளியேற அறிவுறுத்தல்!
தலைமைக் காவலருக்கு எஸ்.பி. பாராட்டு
உலக அளவிலான காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான தடகளப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட பெண் தலைமைக் காவலருக்கு எஸ்.பி. பாராட்டு தெரிவித்தாா்.
காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான உலக அளவிலான தடகளப் போட்டிகள், பா்மிங்ஹாமில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு காவல் நிலைய பெண் தலைமைக் காவலா் கிருஷ்ணரேகா உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு 3 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளாா். கிருஷ்ணரேகாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தாா்.