``நிபந்தனையற்ற அன்பு, அமைதி.. மீரா'' - விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர்சூட்டிய அமீர்...
``எங்கள் மகள் சோஷியல் மீடியாவில் இல்லாததற்குக் காரணம் ஐஸ்வர்யா ராய்" - மனம் திறந்த அபிஷேக் பச்சன்
நடிகர் அபிஷேக் பச்சனின் காளிதர் லாபட்டா ஜூலை 4-ம் தேதி ஜீ 5 ஓடிடி-ல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அபிஷேக் பச்சன் ஈடுபட்டுவருகிறார்.
சமீபத்தில் நயன்தீப் ரக்ஷித் என்பவருடைய யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ``எங்கள் மகள் ஆராத்யா பச்சனிடம் என் தந்தை பெரும் நடிகர், என் மனைவி உலகப் புகழ்பெற்ற நடிகை என்றெல்லாம் ஒருபோதும் பேசியதில்லை.
ஆனால் அவள் இப்போது வளர்ந்துவிட்டாள். எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறாள் என்று நம்புகிறேன். இதற்கான பெருமை முழுக்க முழுக்க அவளின் அம்மா ஐஸ்வர்யா ராய் பச்சனையே சாரும்.
ஒரு கணவனாக எனக்கு சுதந்திரம் இருக்கிறது, நான் வெளியே சென்று என் படத்துக்கான பணிகளைச் செய்கிறேன். என் மனைவி ஐஸ்வர்யா, ஆராத்யாவுடன் இணைந்து குடும்பத்தைக் கவனிக்கிறார். அவர் அற்புதமானவர், தன்னலமற்றவர். இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
தாயைப் போல குழந்தைகளுக்கு எது, எப்போது தேவையோ அதைக் கொடுக்கும் திறன் ஒரு தந்தைக்கு இல்லை என்றே கருதுகிறேன். ஏனெனில் குழந்தைக்கும் தாய்க்குமான உறவு வேறு வழியில் இணைக்கப்பட்டுள்ளது.
இது தாய்மார்களுக்கு மட்டுமே உள்ள பரிசு. என் அம்மாவுக்கு 76 வயது, எனக்கு 49 வயது ஆனாலும் இப்போதும் என் அம்மாவுக்கு நான் ரொம்ப ஸ்பெஷல். அதுதான் ஒவ்வொரு குழந்தைக்கும் நடக்கிறது.
நீங்கள் எவ்வளவு வயதானாலும், உங்கள் அம்மாவிடம், நீங்கள் எப்போதும் ஒரு குழந்தையாகவே இருப்பீர்கள். எங்கள் மகள் ஆராத்யா எந்தச் சமூக ஊடகங்களிலும் இல்லை, அவளிடம் தொலைப்பேசியும் இல்லை. இதற்குக் காரணம் என் மனைவி ஐஸ்வர்யா. எங்கள் குழந்தை எங்கள் குடும்பத்தின் பெருமை. மகிழ்ச்சி. நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...