செய்திகள் :

'உலகத்துலயே எங்கள மாதிரி தோற்று, கூட்டணி போகாத கட்சி இல்ல!' - சீமான் பெருமிதம்!

post image

'சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு!'

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, 'நான்கு முனைப் போட்டியெல்லாம் இல்லை. நாம் தமிழர் எப்போதும் தனிமுனைதான்.' என வித்தியாசமாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சீமான்
சீமான்

'நான்கு முனைப்போட்டி இல்லை!'

சீமான் பேசியதாவது, 'விஜய் கட்சிக்கு விஜய்தானே முதலமைச்சர் வேட்பாளராக இருக்க முடியும். நான்கு முனைப் போட்டி என்பது கிடையாது. நாங்கள் தனிமுனைதான். மும்முனைப் போட்டி என அவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்கள். அந்த கட்சிகள் யாராவது மொழியைப் பற்றி பேசுகிறார்களா?

என் நாடு, என் நிலம், என்னுடைய வளம் என இந்தக் கட்சிகள் பேசியிருக்கிறதா? அவர்கள் வாக்குகளை குறிவைக்கிறார்கள். நாங்கள் நாட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். எங்களுக்கும் அவர்களுக்கும் 1000 கி.மீ தூரம் இருக்கிறது. எங்களுக்கு இந்த நிலத்தில் போட்டியே கிடையாது. 2010 இல் கட்சியை தொடங்கும்போதே இந்திய திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தேன்.

சீமான்
சீமான்

நான்கு பொதுத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் எல்லாவற்றிலும் தோற்று இன்னமும் தனித்துப் போட்டி போடும் இயக்கம் நாம் தமிழர் மட்டுமே. இந்திய அளவில், உலகளவில் இப்படி எந்தக் கட்சியுமே கிடையாது. விஜய்க்கும் எனக்கும் கொள்கையில் நிறைய தூரம் இருக்கிறது. நீங்கள் பெரியாரை கொள்கை வழிகாட்டி என்கிறீர்கள். தமிழை சனியன் என்றும், காட்டுமிராண்டி மொழி என்றும் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்கிறார்களா?' என்றார் காட்டமாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன்... ரேஸில் பெண் தலைவர்கள்; பாஜகவின் அடுத்த தேசியத் தலைவர் யார்?

பாஜக தேசியத் தலைவருக்கான தேர்வு விரைவில் நடக்க உள்ளது.2020-ம் ஆண்டு பாஜக-வின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெ.பி.நட்டா. இவரின் பதவிக்காலம் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதமே முடிந்துவிட்டது. ஆனால்,... மேலும் பார்க்க

இபிஎஸ் சுற்றுப்பயணம் ரவுண்ட் அப்: சாமி தரிசனத்தோடு தொடக்கம்; அதிமுக நிர்வாகிகளிடம் பிக்பாக்கெட்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 'மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்' என்கிற பெயரில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். அதன் முதற்கட்டமாக கோவை மாவட்டம், ம... மேலும் பார்க்க

Armstrong: `கைகூடாத இணைப்பு முயற்சிகள்’ - ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தனிக்கட்சி தொடங்கிய பின்னணி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு 5.7.2024 அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து விசாரண... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வரி; இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் ட்ரம்ப் - காரணம் என்ன?

ஏப்ரல் 2-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிற நாடுகள் மீது 'பரஸ்பர வரியை' அறிவிக்க, உலக நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. இதனையடுத்து, ஏப்ரல் 9-ம் தேதியில் இருந்து அடுத்த 90 நாள்களுக்கு, இந்தப் பர... மேலும் பார்க்க

`தன் நண்பர் ஒருவரை நாசாவின் தலைவராக்க சொல்லி கேட்டார் மஸ்க்; நான்..!’ - ட்ரம்ப் சொல்வதென்ன?

ஜூலை 5-ம் தேதி உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் 'அமெரிக்கா கட்சி' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இவருக்கும் இடையே உருவான கருத்து மோதலின் விளைவே இந்தக் கட... மேலும் பார்க்க