செய்திகள் :

``நாங்கள் கூட்டணி அமைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சியா?'' - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

post image

"மிசாவில் உங்களை கைது செய்தவர்களுடன் நீங்கள் கூட்டணி வைக்கலாம்.. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு" என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் சுற்றுப்பயணம் தொடங்கினார்.

மாலை அவரின் சுற்றுப்பயணத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எல். முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி - எஸ்.பி.வேலுமணி

எடப்பாடி பழனிசாமி பிரசார பேருந்தில் ரோட்ஷோவாக வந்தார். பிறகு அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் சிறிது தூரம் நடந்து சென்றார்.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சூழ்ந்திருந்த மக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மக்கள் வெள்ளத்தில் நீந்தி இங்கு வந்துள்ளேன். அதிமுக - பாஜக கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில் இமாலய வெற்றி பெறும். தீய சக்தி திமுக-வை அகற்றுவோம். திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததா இல்லையா. நீங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தபோது மதவாத கட்சி இல்லை. நாங்கள் கூட்டணி அமைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சியா.

மத்தியில் பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சியை கொடுத்து கொண்டிருக்கிறார். பாஜக மதவாத கட்சி, தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என திமுக மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. 16 ஆண்டுகாலம் திமுக, மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்து மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களின் குடும்பத்தாருக்கு பதவி மட்டுமே வாங்கினர். இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. ஸ்டாலினின் கனவு பகல் கனவாக மாறும்.

பிரசாரம்

அதிமுக பொற்கால ஆட்சி கொடுத்தது. விலைவாசி, வரி உயர்வு இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். திமுக வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது. மக்கள் உங்களுக்கு பாடம் எடுப்பார்கள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஸ்டாலின் பொம்மை முதல்வராக இருக்கிறார்.

காவல்நிலையத்துக்கு போகவே மக்கள் பயப்படுகிறார்கள். திமுக நிறைவேற்ற முடியாத 525 வாக்குறுதிகளை கொடுத்து, 15% வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. அத்தனையும் பொய் அறிவிப்பு. அதிமுக கொண்டு வந்த நல்ல திட்டங்களை எல்லாம் முடக்கியதுதான் திமுக சாதனை.

பிரசாரம்

எமர்ஜென்ஸி, மிசா கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துவிட்டு, எங்கள் கூட்டணியை குறை சொல்கிறீர்களா. உங்களை கைது செய்த காங்கிரசுடன் நீங்கள் கூட்டணி வைக்கிறீர்கள். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்து, நாட்டுக்கு பெருமை சேர்க்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் என்ன தவறு. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறி வருகின்றன. எங்கள் கூட்டணி வலிமையானது. இதில் மேலும் பல கட்சிகள் இணையவுள்ளன." என்றார்.

`மகாராஷ்டிரா எங்கள் பணத்தில் வாழ்கிறது..!' - தாக்கரே சகோதரர்களை விமர்சித்த பாஜக எம்.பி

மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மராத்தி பேசமாட்டேன் என்று சொன்ன தொழிலதிபர் அலுவலகத்தை ராஜ் தாக்கரே கட்சி தொண்டர்கள் தாக்கி ச... மேலும் பார்க்க

ரஷ்யா: கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,00,000 நிதி - புதின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதையடுத்து, சில மாகாணங்களில் கர்ப்பம் தரிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு குழந்தைப் பேறுக்காகவும், வளர்ப்புச் செலவுக்காகவும் அரசு சார்பில் 1,00,000 ரூபிள்கள்... மேலும் பார்க்க

'நான் யாருன்னு தெரியல?' - திடீரென விசாரித்த அமைச்சர்... தெரியாமல் விழித்த அரசு பேருந்து ஊழியர்கள்

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளில் அவ்வப்போது திடீரென்று ஆய்வு செய்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்து வருவதை தனது அலுவல்களில் ஒன்றாக வைத்துள்ளார். அந்த வகையில், கோவையில் உள்ள கொடீச... மேலும் பார்க்க

'முருகர் மாநாட்டை நடத்திய பெருமை எங்களுக்கே உண்டு!' - அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!

'திருச்செந்தூர் குடமுழுக்கு!'திருச்செந்தூர் முருகன் கோயிலின் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடந்து முடிந்திருக்கிறது. குடமுழுக்கு முடிந்த பிறகு அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப... மேலும் பார்க்க

இறைவனை கூட பார்க்க முடியவில்லை; 2000 ஆண்டு கால பிரச்னை இது- முருகர் கோயிலில் செல்வப்பெருந்தகை வேதனை!

ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள வல்லக்கோடை முருகன் கோயிலின் குடமுழுக்கு நிகழ்வு ஒன்றில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.செல்வப்பெருந்தகைமூலவர... மேலும் பார்க்க