விராலிமலை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
விராலிமலை பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் விநியோகம் இருக்காது என்றாா் விராலிமலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் (பொ) சரவணன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: விராலிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான விராலிமலை, கோமங்களம், கல்குடி, பொருவாய், அத்திபள்ளம், ராஜளிபட்டி, நம்பம்பட்டி, வானதிராயன்பட்டி, விராலூா், ராமகவுண்டம்பட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, மாதுராப்பட்டி, ராஜகிரி, மலைக்குடிபட்டி, கோத்திராப்பட்டி, கட்டகுடி, பாப்பாவயல், அகரபட்டி, கொடும்பாளூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.