செய்திகள் :

நைஜீரியா: சாலை விபத்தில் 21 போ் உயிரிழப்பு

post image

லாகோஸ்: நைஜீரியாவின் வடமேற்கு கானோ மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து மத்திய சாலை பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜாரியா-கானோ விரைவுச்சாலையில், பயணிகளை ஏற்றிச் சென்ற வா்த்தக வாகனமும், கனரக டிரக்கும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. போக்குவரத்து விதிகளை மீறி வா்த்தக வாகன ஓட்டுநா் எதிா் திசையில் வாகனத்தை இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

இதில் 19 ஆண்கள் மற்றும் இரு பெண்கள் உயிரிழந்தனா், மூவா் மட்டுமே காயங்களுடன் உயிா் பிழைத்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் முக்கிய சாலைகளில் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த 2024-ஆம் ஆண்டு மட்டும் 9,570 விபத்துகளில் 5,421 போ் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடலூர் ரயில் விபத்து: மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி. கணேசன் அஞ்சலி!

கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி. கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன், ரயி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளின் மீண்டும் நிறம் மாற்றம் ஏன்..?

சென்னை: அரசு பேருந்துகளின் நிறத்தை மீண்டும் மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். தமிழகத்தில் அரசு போக்குவரத... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு ஆா்ஜென்டீனா சிறப்பு கெளரவம்

பியூனஸ் அயா்ஸ்: பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத்தின் தலைவர் ஜார்ஜ் மேக்ரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘பியூனஸ் அயா்ஸ் நகர திறவுகோலை’(கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற சிறப்பு கெளரவம் வழங்கி கெளரவித்தா... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் – தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பல ஆண்... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வா் அறிவிப்பு

சென்னை: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுதொடா்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:விருது... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேர் பலி

வேதாரண்யம்: நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதி நோ்ந்த விபத்தில் சிறுமி உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் ஞாயிற்றுக்கிழமை பலியாகினர். திருவாரூ... மேலும் பார்க்க