பொன்னமராவதியில் நாளை மின்தடை
பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
கொன்னையூா், நகரப்பட்டி மற்றும் மேலத்தானியம் ஆகிய துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணியால் குழிபிறை, பனையபட்டி, செவலூா், கோவனூா், செம்பூதி, கொப்பனாப்பட்டி, ஆலவயல், நகரப்பட்டி, கண்டியாநத்தம், தொட்டியம்பட்டி, மைலாப்பூா், மேலச்சிவபுரி, வேந்தன்பட்டி, வேகுப்பட்டி, காரையூா், மேலத்தானியம், கீழத்தானியம், ஒலியமங்கலம், நல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். அசோக்குமாா் தெரிவித்தாா்.