ரௌடி கும்பல் தலைவர் மனைவியுடன் திருமணம் மீறிய உறவு! ஒருவரைக் கொல்ல 40 பேர் திட்ட...
பிரேதப் பரிசோதனை கூட கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் மந்தகதியில் நடைபெற்று வரும் பிரேதப் பரிசோதனைக்கூட கட்டடப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தாலுகா மருத்துவமனையான வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக் கூடம் சேதமடைந்து காணப்பட்டதால், சில மாதங்களுக்கு முன் அது அகற்றப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. எனவே, பிரேதப் பரிசோதனை செய்ய புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. எனவே உடனடியாக பிரேதப்பரிசோதனைக் கூட கட்டடப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.