வடுகப்பட்டியில் நாளை மின் நிறுத்தம்
விராலிமலையை அடுத்துள்ள வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை - ஜூலை 7 மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வடுகப்பட்டி, வேலூா், கத்தலூா், குளவாய்பட்டி,முல்லையூா், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூா், மதயானைப்பட்டி, திருநல்லூா், சாத்திவயல், பேராம்பூா், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி, சித்தாம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகத்தின் விராலிமலை உதவி செயற்பொறியாளா் சரவணன்(பொ) தெரிவித்துள்ளாா்.