டிரம்ப் உத்தரவுக்கு ஜப்பான் கட்டுப்படாது -பிரதமர் ஷிகேரு இஷிபா
ரௌடி கும்பல் தலைவர் மனைவியுடன் திருமணம் மீறிய உறவு! ஒருவரைக் கொல்ல 40 பேர் திட்டம்!
மகாராஷ்டிரத்தில் ரௌடி கும்பல் தலைவர் மனைவியை கொலை செய்ததாக ஒருவரை 40 பேர் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் மாவட்டத்தில் இப்பா என்ற ரௌடி கும்பலைச் சேர்ந்த அர்ஷத் டோபி என்பவருக்கும், கும்பல் தலைவரின் மனைவிக்கும் இடையே திருமணம்மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமையில் அந்தப் பெண்ணுடன் டோபி சேர்ந்து பைக்கில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஜேசிபி மோதியதில் இருவரில் பெண் படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து, பெண்ணை இரண்டு தனியார் மருத்துவமனைக்கு அர்ஷத் அழைத்துச் சென்றபோதிலும், பெண்ணுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனை மறுத்ததாகத் தெரிகிறது.
இதனையடுத்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமையில் பெண் உயிரிழந்தார்.
இதனிடையே, அர்ஷத்துக்கும் தனது மனைவிக்கும் இடையே திருமணம்மீறிய உறவு இருப்பதை அறிந்த ரௌடி கும்பல் தலைவர், அர்ஷத்தை கொலை செய்ய திட்டமிட்டு, 40 அடங்கிய இப்பா கும்பலுக்கு உத்தரவிட்டார்.
விபத்தினால் தனது மனைவி உயிரிழந்திருக்க மாட்டார், அர்ஷத் கொலை செய்ததால்தான் உயிரிழந்திருப்பார் என்று குற்றஞ்சாட்டி அர்ஷத்தை தேடி வந்தனர்.
தன்னை 40 பேர் அடங்கிய கும்பல் தேடுவதை அறிந்த அர்ஷத், தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு காவல் நிலையத்தில் வாக்குமூலத்துடன் தஞ்சம் அடைந்தார்.
பெண்ணை அர்ஷத் கொலை செய்திருக்கலாம் என்று கூறினாலும், காயமடைந்த பெண்ணுடன் மருத்துவமனையில் அர்ஷத் இருக்கும் சிசிடிவி காட்சிகளும் உள்ளன.