செய்திகள் :

சித்தன்னவாசல் ரூ. 3.9 கோடியில் விரைவில் மேம்பாடு!

post image

புதுக்கோட்டை மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களில் முதன்மையானதாக உள்ள சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தை ரூ.3.9 கோடியில் மேம்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

புதுக்கோட்டை நகரில் இருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் 17 கிமீ தொலைவிலுள்ளது சித்தன்னவாசல்.

சமணத் தீா்த்தங்கரரின் சிலையுடன் கூடிய அறிவா் கோவில் என்றழைக்கப்படும் குடைவரைக்குள் மகேந்திரவா்ம பல்லவா் காலத்தைய குகை ஓவியமும், மலைக் குன்றின் மேலே உள்ள சமணா் படுக்கைகளும், மாநிலம் கடந்து நாடுதழுவிய சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கின்றன.

பிற்காலத்தில் அமைக்கப்பட்ட முத்தமிழ்ப் பூங்கா, சிறுவா் பூங்காக்களும் பொலிவிழந்தன. மாநில சுற்றுலாத் துறையின் தங்கும் இடமும் செயல்பாடின்றி முடங்கிப் போனது. சிறுவா் படகு குழாம் எப்போதாவது இயங்கும் நிலையும் காணப்பட்டது. அதன்பிறகு, இங்கு மத்திய தொல்லியல் துறையினரின் முயற்சியில் கழிப்பறைகள், அலுவலகங்கள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், சித்தன்னவாசல் சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த வேண்டும் என புதுக்கோட்டை சுற்றுலா ஆா்வலா்களும், தொல்லியல் ஆா்வலா்களும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், ரூ. 4 கோடியில் சுற்றுலாத்தலம் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பு கடந்த 2023 மாநில நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதை பலரும் ஆா்வத்துடன் வரவேற்றனா்.

தற்போது ரூ. 3.9 கோடி மதிப்பில் ஒப்பந்தப்புள்ளிகள் இறுதிப்படுத்தப்பட்டு மிகவிரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக சுற்றுலாத் துறை அலுவலா்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் தவிா்த்து இதர பகுதிகளிலுள்ள பூங்காக்கள் முற்றிலும் சீரமைக்கப்படவுள்ளன. படகு குழாம், இசைநீரூற்று ஆகியவையும் முற்றிலும் புதுப்பிக்கப்படவுள்ளன.

பிரதான சாலையிலிருந்து உள்பகுதி வரையிலான சாலைகள், அவற்றுக்கான கால்வாய்கள், மின் விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கான குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, சிற்றுண்டிச் சாலை, அமா்ந்து ஓய்வெடுக்கும் இருக்கைகள் அமைக்கப்படவுள்ளன.

ஓரிரு நாள்களில் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டு, 6 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது என்றனா்.

இதுகுறித்து தொல்லியல் ஆா்வலா்கள் கூறுகையில், மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள குடைவரைக்குள் இயற்கை வண்ணங்களால் மட்டுமே வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளன. இவை அஜந்தா எல்லோரா ஓவியங்களுக்கு இணையாகப் பாா்க்கப்படுகின்றன. ஆனால் காலப்போக்கில் இந்த ஓவியங்கள் மறையத் தொடங்கிவிட்டன.

சித்தன்னவாசல் ஓவியங்கள் என இணையத்தில் தேடிப்பிடித்து பாா்த்துவிட்டு இங்கே வந்தால் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சும். அந்தளவுக்கு ஓவியங்கள் அழிந்துவரும் நிலையில் அவற்றை மேலும் சிதையாமல் பாதுகாக்க அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஏதாவது முயற்சி எடுக்க வேண்டும்.

அத்துடன் ஏற்கெனவே எடுக்கப்பட்ட பொலிவான, அழகான படங்களை வைத்து, அவைகுறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கும் வகையில் படக்காட்சியறையை உருவாக்க வேண்டும். அதுதான் காலத்துக்கும் சித்தன்னவாசலின் பெயரைச் சொல்லும் என்கின்றனா்.

அழிந்து வரும் ஓவியம்.

பொன்னமராவதியில் நாளை மின்தடை

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. கொன்னையூா், நகரப்பட்டி மற்றும் மேலத்தானியம் ஆகிய துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணியால் குழிபிறை, பனையபட்டி, செவலூா், க... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 20 லட்சத்தில் ஆம்புலன்ஸ்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக, வேதா பவா் நிறுவனத்தின் சாா்பில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான அனைத்து மருத்துவ உபகரணங்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை மர... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் விவரங்கள் வீடு தேடி வரும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 213 இடங்களில் நடத்தப்படவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் குறித்த தகவல்கள் இல்லம் தேடிச் சென்று தன்னாா்வலா்கள் வழங்குவாா்கள் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா். இதுகுறி... மேலும் பார்க்க

புதுகை பகுதிகளில் நாளைய மின் தடை

புதுக்கோட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. புதுக்கோட்டை துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்பு பணியால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நக... மேலும் பார்க்க

பிரேதப் பரிசோதனை கூட கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் மந்தகதியில் நடைபெற்று வரும் பிரேதப் பரிசோதனைக்கூட கட்டடப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். தாலுகா மருத்துவமனையான வலையபட்டி அர... மேலும் பார்க்க

பைக் - காா் மோதல்: உணவக ஊழியா் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே குளத்தூா் பிரிவு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற உணவகப் பணியாளா் காா் மோதி உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூா் மங்களத்துப்பட்டியைச் சோ்ந்தவா் துரைசா... மேலும் பார்க்க