பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு! தஹாவூர் ராணாவின் திடுக்கிடும் வாக்...
காந்தாரா சேப்டர் - 1 ரிலீஸ் அப்டேட்!
காந்தாரா சேப்டர் - 1 வெளியீட்டுத் தேதியை போஸ்டர் வெளியிட்டுப் படக்குழுவினர் மீண்டும் உறுதி செய்துள்ளனர்.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 90-களில் நடக்கும் நில உரிமையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளுமாக படம் உருவாகியிருந்தது.
கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று அசத்தினார். இதனைத் தொடர்ந்து, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான ’காந்தாரா சேப்டர் - 1’ படப்பிடிப்பு தொடங்கியது.
இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் பரவி வந்தன. இதனால், திட்டமிட்டபடி இந்தாண்டு படம் வெளியாகாது என்று கூறப்பட்டது.
இதனிடையே, குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகும் என்று படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது போஸ்டர் வெளியிட்டு மீண்டும் உறுதி செய்துள்ளனர்.
படத்தின் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.
